35000 ஆசிரியர் வெற்றிடங்கள்



35,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானம், கணிதம், உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கே, இவ்வாறு வெற்றிடம் நிலவுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலம் உள்ளிட்ட சில பாடங்களுக்கு மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளபோதிலும், சில பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனால், மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை, ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முனனெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





Comments

Popular posts from this blog

தேசிய பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் - நேர்முகப் பரீட்சை

Field Officer - இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்