தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆசிரியர் சேவை 2 -11 க்கு நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களது பெயர் பட்டியலை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. பெயர் பட்டியல் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பொது நேர் முகப் பரீட்சைகள் இம்மாதம் 24, 25 ஆகிய திகதிகளில் அமைச்சில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம்
வேலையில்லாத பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான நியமன கடிதங்கள் இன்று தபாலில் அனுப்பப்படும் என, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 50,000 பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், சுமார் 400,000 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியராச்சி தெரிவித்தார். இது தொடர்பான பணிகள் ஜனாதிபதி செயலகம் மூலம் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நியமனங்களில், 80% ஆனோர் பாடசாலைகளில் பயிலுனர் ஆசிரியர்களாக இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். (தினகரன் இணையம்)
Accountant jobs in Qatar
ReplyDelete