2020 இல் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு பல்கலை அனுமதி! முடியாவிடின் அமைச்சு பதவியை ராஜினாமா செய்வேன்.
2020ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்கு ஒரு இலட்சம் மாணவர்களை உள்வாங்குவதற்கும் பல்கலைக்க தகுதிபெறும் அனைவருக்கும் பல்கலைக்கழக பட்டப்படிப்பையும் உயர்கல்வியையும் தொடர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பணிகளை ஒருமாதகாலதிற்குள் நிறைவுசெய்ய 30 பேர் அடங்கிய விசேட நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியின் பிரகாரம் இந்தப் பணியை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செய்துமுடிக்க முடியாது போனால் அமைச்சுப்பதவியை துறந்து விடுவேன் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பகிடிவதைக்கு உள்ளாகி பல்கலைக்கழக பட்டப்படிப்பை தொடர முடியாதுபோன அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்காக விசேட ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயற்படும் இந்த ஆணைக்குழுவுக்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்கள் விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் இணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
2020ஆம் ஆண்டில் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குத் தகுதிபெறும் அனைவருக்கும் பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு அல்லது உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கும். ஒவ்வாரு துறைக்கும் எப்படி மாணவர்களை உள்வாங்குவதென விளக்கமளிக்கும் அறிக்கையொன்றை கடந்தவாரம் நான் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தேன்.
இதுதொடர்பில் விசேட நிபுணத்துவமுடைய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசரியர்கள் என துறைசார்ந்தவர்களை உள்ளடக்கிய 30 பேர்கொண்டகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. ஒருமாதகாலத்திற்குள் இதற்கான சிபாரிசுகளை ஆய்வுக்குட்படுத்தி நிறைவுசெய்வது சமர்ப்பிப்பது இவர்களது பொறுப்பாகும்.
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை பல்கலைக்கு உள்வாங்குவது மிகவும் கடினமான இலக்கானது. நாம் சுதந்திரமடைந்தது முதல் 3௦ ஆயிரத்திற்கும் அண்மித்த அளவான மாணவர்களே பல்கலைக்கு உள்ளாங்கப்பட்டு வந்துள்ளனர். பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குத் தகுதிபெறும் ஒன்றரை இலட்சம் ' மாணவர்களுக்கும் பட்டப்படிப்பை முடிப்பதற்காக மாற்று வழிமுறைகளை நாம் ஆய்வுசெய்து வருகின்றோம். அதற்கான வேலைத்திட்டங்களையும் தயாரித்துள்ளோம். நடைமுறைக்கு ஏற்ற வகையில் இதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாது போனால் நான் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகிவிடுவேன்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இதனை கூறியுள்ளேன். மக்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டால் உரிய காலத்திற்குள் அதனை நிறைவேற்றுவது அமைச்சர் ஒருவரின் பொறுப்பாகும். அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் என அனைத்து விடயங்களுக்கும் இது பொருந்தும்.
ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் எனது அமைச்சின் கீழ்தான் உள்ளது. 2014 ஆம் ஆண்டுவரை சம்பளத்தை செலுத்துவது தொடர்பில் அதில் எவ்வித சிக்கல் நிலைமையும் ஏற்பட்டிருக்கவில்லை. இலாபத்தில் இயங்கியது கூட்டுத்தாபனம். இன்று அங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்த முடியாதுள்ளது. ஏனைய நிறுவனங்களிலும் அவ்வாறான நிலைமைதான் என்றார்.

Comments
Post a Comment