பட்டதாரிகளின் நியமணக் கடிதங்கள் தயார்... 67,158 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்..



இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் படி அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்குமாக கோரப்பட்ட விண்ணப்பங்கள் சரி வர பரீட்சித்து முழுத்தகவலும் திரட்டி அவர்கள் தேர்வு செய்த துறைகளில் பொருத்தமான பயிற்சிகளை வழங்கவென அவர்களுக்கான நியமனங்கள் மாவட்ட செயலக செயலாளரினால் எதிர்வரும் மார்ச் 1 அல்லது 2 இல் வழங்கப்படும்.


கிடைக்கப்பெற்ற மொத்த விண்ணப்பம் 67,158 (பட்டதாரி, டிப்ளோமாதாரி)
நியமனம் கிடைக்கவுள்ள தொகை 54000
குறித்த பட்டதாரி தகவல்களை சரிவர பூர்த்தி செய்து 100% தகுதியுடையவர்கள் 50000 பெயர்கள் தெரிவு முழுமை பெற்றுள்ளது.
மாவட்ட செயலகங்களுக்கு இம்மாதம் 27, 28 திகதிகளில் அனுப்பப்படும்.

நியமனம் மாவட்ட செயலகத்தினால் அந்தந்த மாவட்ட பட்டதாரிகளுக்கு கடிதம் அல்லது தொலைபேசி அழைப்பினால் உறுதியான நியமன திகதி மற்றும் நேரம், ஆடை போன்ற தகவல்கள் வழங்கப்படும்.


வடமாகாணத்தில் 3800 - 4000 வரையான விண்ணப்பங்கள்.

யாழ்ப்பாணம் - 1431
வவுனியா - 687
மன்னார் - 562
முல்லைத்தீவு - 503
கிளிநொச்சி - 338

மிகுதி டிப்ளோமாதாரிகளாக இருக்கலாம்.

ஆசிரியர் நியமன தொகை 1650
மிகுதி பட்டதாரிகள் ஏனைய துறைகளுக்கு தெரிவு செய்யப்படுவர். அது அவர்கள் பெரும் நியமன கடித்ததில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நன்றி.
தனிப்பட்ட ஒருவரின் தகவல் திரட்டு.

Comments

Popular posts from this blog

Field Officer - இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் - நேர்முகப் பரீட்சை