பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி பாலியல் வன்புணர்வு - 7 இளைஞர்கள் கைது !



இணைத்தளம் ஊடாக பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி அவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தும் குழுவொன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித விதானபதிரண இதனை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களும் 20 வயதுக்கும குறைந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் சிலரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Vacancies 04 Star Hotel in Kuwait.

தேசிய பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் - நேர்முகப் பரீட்சை