ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முக தேர்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது !



(பாறுக் ஷிஹான்)

புதன்கிழமை(26) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு நேர்முகதேர்வு இடம்பெறுவதுடன் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆர்வத்துடன் குறித்த நேர்முகத்தேர்விற்கு வருகை தந்திருந்தனர்.இதன் போது பிரதேச செயலகத்தில் இராணுவத்தினர் வருகை தந்துள்ளதுடன் நேர்முக தேர்விலும் பங்கேற்றிருந்தனர்.

இவ் வேலைவாய்ப்பிற்கான நேர்முக தேர்வினை சீராக மேற்கொள்வதற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.இன்று மாத்திரம் ஏறத்தாழ 300 க்கும் அதிகமான விண்ணப்பத்தாரிகள் நேர்முக தேர்வில் பங்கேற்கவுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் குறித்த வேலைவாய்ப்பிற்கு நாவிதன்வெளி அன்னமலை சவளக்கடை சொறிக்கல்முனை சாளம்பைக்கேணி மத்தியமுகாம் உள்ளிட்ட கிராம சேவக பிரிவில் உள்ள வேலையற்ற விண்ணப்பத்தாரிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Comments

Popular posts from this blog

தேசிய பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்தல் - நேர்முகப் பரீட்சை

Field Officer - இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம்